திருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்: விரகனூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 27 )அடையாளம் தெரியாத ஆறு நபர்களால் வெட்டிப் படுகொலை!

திருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்: விரகனூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 27 )அடையாளம் தெரியாத ஆறு நபர்களால் வெட்டிப் படுகொலை!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தா லுகா ஐராவதநல்லூர் அருகே சாலையின் அருகே அமர்ந்திருந்த மதன்ராஜ் என்பவரை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

கொலை சம்பவம் குறித்து தகவறிந்து வந்த சிலைமான் போலிஸார் மதன் ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் மதன் ராஜ் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும்,
அவருடன் வேலை செய்பவர் மனைவிய யுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் இந்த கொலை நடந்துருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர் .

மேலும் கொலையாளிகள் ஆட்டோவில் ஆறு பேர் வந்துள்ளனர் என்பதையடுத்து சிலைமான் போலீஸார் தனி படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image