மணலூர் அகழாய்வில் சுடுமண்னால் ஆன உலை கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை என நான்கு பகுதிகள் நடைபெறுகின்றது. கீழடியை தவிர மற்ற இடங்களில் முதன் முதலாக தற்போது பணிகள் நடைபெறுகின்றன. மணலூரில் நடைபெறும் அகழாய்வு பணிகள் மே 22பனிகள் ஆரம்பித்து பணிகள் நடந்து வரும் வேலையில் இன்று பணியின் சுடுமண் உலை ஒன்று கண்டுபிடிக்கபட்டு உள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. இந்த சுடுமண்னால் ஆன உலை எதற்காக பயன்படுத்தபட்டது என ஆய்வு செய்து வரும் தொல்லியல் இயக்குனர் சிவானந்தம் இந்த உலை அணிகலன்களை வடிவமைப்பதிலும் உலோகங்கள் தயாரிக்க பயன்பட்டு உள்ளதா என இனி வரும் நாட்களில் முழுமையாக தெரியவரும் என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image