மண்டபம் ஒன்றியத்தில் கலைஞர் பிறந்த தின விழா..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக சார்பில்  கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் குடியிருப்பு பகுதியில் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் திமுக., கொடியேற்றினார். மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியோருக்கு உணவு பொருட்கள், காய்கறிகள் தொகுப்பை வழங்கினார்.

சூசையப்பர் தேவாலய பகுதியில் 200 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை  மாவட்ட கவுன்சிலர்  ரவிச்சந்திர ராமவன்னி  வழங்கினார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி.ஜீவானந்தம், தங்கச்சிமடம் ஊராட்சி திமுக செயலர் எஸ்.கதிரேசன், 21வார்டு ஒன்றிய கவுன்சிலர் பேரின்பம், 20 வாா்டு ஒன்றிய கவுன்சிலா் உஷாலட்சமி முத்து கருப்பன், தண்ணீர் ஊற்று கிளை செயலர் பால் தாமஸ், ரப்பானி, எஸ்தர், சந்தானம், சேசுமிக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மண்டபம் மேற்கு ஓன்றிய திமுக சார்பில் புதுவலசையில் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிவாரண உதவி வழங்கினார். ஓன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், ஒன்றியக்குழு துணை தலைவர் பகவதி முத்துக்குமார், புதுவலசை ஊராட்சி செயலர் முகமது ஜெய்னுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மண்டபம் ஓன்றிய திமுக சார்பில் வாணியன்குளம், எம்பிகே வலசை, வடக்கு வலசை, கோரவள்ளி கிராமங்களில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மண்டபம் பேரூர் திமுக., சார்பில் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாள் விழா பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று காலை கொண்டாடப்பட்டது. அங்குள்ள கொடி கம்பத்தில் நகர் திமுக., செயலாளர் டி.ராஜா (முன்னாள் கவுன்சிலர்) கட்சி கொடி ஏற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா (முன்னாள் கவுன்சிலர்), இந்திய தகவல் தொடர்பு துறை நியமன பிரதிநிதியும், ஹிந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகியுமான  காந்தக்குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் என்.பூவேந்திரன் (முன்னாள் கவுன்சிலர்), நகர் துணை செயலர் எஸ்.பகுருதீன் (முன்னாள் கவுன்சிலர்), மேலமைப்பு பிரதிநிதி சாதிக்பாட்சா, ஒன்றிய பிரதிநிதிகள் சி.தில்லை குமார், மூத்த உறுப்பினர்கள் ஆர்.ஆறுமுகம், பி.பாண்டியன், குலாம் (எ) சாகுல்ஹமீது, மதார்ஷா,  இளைஞரணி செயலர் பா.கீத்தா னந்த், கா.ராஜ்குமார், மாணவரணி செயலர் கிருஷ்ணா, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் டி.வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image