அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடப்பட்டது..

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளியமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் கருணாநிதியின் பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சரும் சட்டன்ற உறுப்பினருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கருருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள் பொற்கொல்லர்கள் குயவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார் மேலும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவி ஒருவருக்கு லேப்டாப்பையும் இலவசமாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை முன்னாள் சேர்மன் சிவப்பிரகாசம் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image