விருதுநகரில் பயங்கரம்; மதுபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய மதுப்பிரியர்: நான்கு பேர் படுகாயம்!

விருதுநகரில் பயங்கரம்; மதுபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய மதுப்பிரியர்: நான்கு பேர் படுகாயம்!

விருதுநகர் மதுரை சாலையில் விருதுநகர் நோக்கி வந்த கார் கந்தபுரம் தெரு பிரிவில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையோரம் நின்று கொண்டிருந்த நபர்கள் மீது மோதியது.

இதில் நான்கு பேர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் தகவல் அறிந்து அங்கு வந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வாகனம் ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் ஆம்த்தூரை
சேர்த்த கார்த்தி (23) என்பவரை விசாரணை செய்ததில் அவர்
குடிபோதையில் காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image