விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது-தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது-தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் வெங்கடசாமி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தென்காசி வட்டார தலைவர் மாயாண்டி ஆகியோர் முன்னிலையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் பின்பு OA.நாராயாணசாமி கூறுகையில், விவசாயிகள் பயன்படுத்தி வரும் கட்டணம் இல்லாத உரிமை மின்சாரம் பல போராட்டங்கள் நடத்தி உழவர் பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடு காலத்திலிருந்து தொடர்கிறது. அப்போதைய போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 60 விவசாயிகள் பலியாகி அவர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இதனை நினைவு கூரும் வகையில், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாயம் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். விவசாய விளை பொருள்களுக்கு ஏற்கனவே விலை இல்லை. மிகவும் கஷ்டமான சூழ்நிலையை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு உரிய உரிமையாக பெற்ற இந்த மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து மீண்டும் இலவச மின்சாரம் தொடர வழிவகை செய்ய வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் இதனை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடசாமி, மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தென்காசி வட்டார தலைவர் மாயாண்டி ஆகியோர் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..