உங்கள் உடல் நலத்துடன் பிறர் நலன் பேணுங்கள்…இராமநாதபுரத்தில் பிரபல மருத்துவரையும் விட்டு வைக்கவில்லை “கொரோனோ”..

கொரோனோ எனும் கொடிய வைரஸ் எங்கோ தொடங்கியுள்ளது என்று எண்ணிய நிலையில் நம் நாட்டில் நுழைந்து, நம் ஊருக்குள் தொற்றி இன்று நம் நெருங்கிய சொந்த பந்தங்களையும் தொற்ற ஆரம்பித்துள்ளது.  நமக்கு வராது என்று எண்ணி இருந்த நிலையில் நம்மையும் பாதித்து விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

மேலும் பல்லாண்டு காலம் குடும்ப மருத்துவராக இருத்த பிரபல மருத்துவரையும் நோய் பாதித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், இந்த நோய்க்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்தியுள்ளது.  இதனால் அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு  முதற்கட்டமாக அவர்களுடைய உறவினர்கள் மருத்தவமனையில் உள்ள நபர்கள் என 163 நபர்களுக்கு முதல் பரிசோதனை நடைபெற்றுள்ளது.

மேலும் இராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழக்கரை, புதுமடம் மற்றும் இன்னும் பலர் சில நாட்கள் முன் வரை சிகிச்சை வந்துள்ளார்கள். ஆகையால் சமீப நாட்களாக அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நபர்கள் தாங்களாகவே முன் வந்து கொரோனோ பரிசோதனை செய்து கொள்வதுடன், தங்களை தனிமைபடுத்தி கொள்வதுடன் இந்த தொற்று நோயிலிருந்து தங்களையும், தங்கள் சுற்றங்களைநும் பாதுகாத்து கொள்வது நல்லது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..