பனங்காட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் கைதான 6 பேரிடம் ரூ.15,800 பறிமுதல்…

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் எஸ்ஐ., வசந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். நாகநாத சமுத்திரம் பனங்காட்டிற்குள் சீட்டாடிய கும்பலை பிடித்தனர். விசாரணையில், பெரியபட்டினம் ராம்குமார், முகமது நஸீர், முகமது மீராஸா, அப்துல் மஜீத், முகமது சீனி அல்தாப், அழகன்குளம் ராஜேஷ் ஆகியோர் பணம் வைத்து சீட்டாடியது தெரிந்தது. இவர்களிடமிருந்து ரூ.15,800 ஐ பறிமுதல் செய்து 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் இவர்களை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image