வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வு அளிப்பதில் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் கேள்வி!

வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வு அளிப்பதில் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் கேள்வி!

இராமநாதபுரம்மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ள மத்திய அரசு வருகிற 8ஆம் தேதியில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வழிபாட்டுத்தலங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை செய்துள்ள தமிழக அரசு வழிபாட்டு தளங்களுக்கு தளர்வு அளிப்பதில் தாமதிப்பது ஏன் என்று தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் தமிழக அரசின் மீது மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.

மத்திய அரசு ஜூன் எட்டாம் தேதியில் இருந்து வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கு மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் செய்யாதது பொதுமக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஜூன் 8ஆம் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்காக ஊரடங்கு உத்தரவில் தமிழக அரசு தளர்வு செய்து உடனடியாக உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களின் கோபத்திற்கும் இறைவனின் சாபத்திற்கும் தமிழக அரசு ஆளாக நேரிடும் என்று முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் எச்சரிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..