மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்திற்கு உதவிய மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி..

மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்திற்கு உதவிய மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி..

மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மின்சார தொடர் வண்டியில் சிறு, சிறு பொருட்கள் விற்பனை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை ஈடு செய்து வந்த நிலையில் கொரானா பேரிடர் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைக்கு தகவல் கிடைத்தது.

கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் குறித்து அறிந்த தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி  திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் திரு. கே.ஜெகதீசனிடம் அந்த தகவலை தெரிவித்து உடனடியாக அந்த தகவலை உறுதி செய்து உதவுமாறு கேட்டு கொண்டார்.

தொழிலாளர்கள் அணி திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஜெகதீசன்  அந்த தகவலை உறுதி செய்து கொண்டு மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைத்து 15க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இன்று (02.06.2020) வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் திருவள்ளூர் வடகிழக்கு கட்டமைப்பு மாவட்டச் செயலாளர் திரு. டி.தேசிங்குராஜன் மற்றும் நகர, வட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image