ஆர்.ஆர்.நகர் அமிர்தா பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம்!

விருதுநகர் ஆர்.ஆர்.நகர் அமிர்தா பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விருதுநகர் பகுதிகளில் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பை ,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம் தலைமை வகித்து வழங்கினார். மேலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது தன்னார்வலர்கள் விஜயராகவன், பாஸ்கர், சுதாகரன், விக்னேஷ், சமூக ஆர்வலர் சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் அமிர்தா பவுண்டேசன் தொண்டு நிறுவனம் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image