பாலக்கோடு வட்டாட்சியரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் கொரோனா நிவாரணமாக மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிக்கை மனு..!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டுப்புற கலைஞர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 65 தினங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் சம்பந்தமாக நலவாரியத்தில் பதிவு செய்த நாட்டுப்புறக்  கலைஞர்களுக்கு மட்டும் 2,000 ரூபாய் கிடைத்த நிலையில் மீதமுள்ள நாட்டுப்புற கலைஞர்கள் தப்பாட்டக் குழு கலைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலை நிகழ்ச்சிகளை நம்பியுள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள் பட்டினியை போக்க குடும்பத்தைக் காக்கவும் நாளொன்றுக்கு 200 ரூபாய் வீதம் மாதம் 6 ஆயிரம் ரூபாய் 6 மாத காலங்களுக்கு வழங்கவேண்டுமென பாலக்கோடு வட்டாட்சியரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில பொறுப்பாளர் BTS செந்தில் தலைமையில் மனு   வட்டாட்சியர் ராஜா விடம் வழங்கப்பட்டது.

இது சம்பந்தமாக  தமிழக அரசுக்கு வட்டாட்சியர் ராஜா  பரிந்துரைக்க படுவதாக தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..