தங்கச்சிமடம் மீனவ மக்களுக்கு மணிகண்டன் எம்எல்ஏ நிவாரண உதவி..

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் கடந்த 45 நாட்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை பேரிடர் துயர் போக்கும் நிவாரணமாக வழங்கினார். அதிமுக., நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், ஊரடங்கு உத்தரவினால் வருவாய் இழந்த தினக்கூலி தொழிலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி தூய்மை காவலர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். இந்நிலையில் விடுபட்ட பகுதிகள், மீனவ மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சட்ட மன்ற உறுப்பினர் மணிகண்டனிடம்  அதிமுக., நிர்வாகிகள்  வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்படி, பாம்பன், தங்கச்சிமடம் பகுதி மீனவ மக்கள் 2 ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். மணிகண்டன் இன்று (02.6.2020) வழங்கினார். ராமநாதபுரம் நகர் பொருளாளர் எம்.ஜெயக்குமார், இளைஞரணி பாசறை செயலர் என்.ஆர்.பால்பாண்டியன், மண்டபம் அவைத்தலைவர் எம்.சுப்ரமணியன், இளைஞரணி செயலர் ஜாகீர் உசேன், அம்மா பேரவை செயலர் எல்.கஜேந்திரன், பழக்கடை சலீம், ஒன்றிய, மகளிரணி செயலர் விஜயலட்சுமி, வார்டு செயலர் ஆதில் அமீன், இளைஞர் பாசறை நிர்வாகி பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image