ராமேஸ்வரத்தில் சிக்கிய , மதுரை போலீஸ் தேடிய குற்றவாளி..

ராமேஸ்வரத்தில் சண்டை சேவல் விற்கப்படுவதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக அலைபேசி எண் 94899 19722 க்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., அறிவுறுத்தல் படி ராமேஸ்வரம் நகர் போலீஸ் தனிப்பிரிவு காவலர் துரித விசாரணையில் வெளியூர்களில் சேவல் சண்டைக்கு வீட்டில் வளர்க்கும் சேவலை சரவணன் என்பவர் விற்பது தெரிந்தது.

இதன்படி சரவணனை பிடிக்க அவர் வீட்டிற்கு  போலீசார் சென்றனர். அப்போது, அங்கு அவரிடம் சேவல் வாங்க வந்தவரிடம் போலீசார் விசாரித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த பிரபாகரன் எனவும், இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது. ஒரு கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனை, மதுரை அவனியாபுரம் போலீசார் நீண்ட நாள் தேடி வருவதும் தெரிந்தது. இதனையடுத்து பிரபாகரனை அவனியாபுரம் போலீசாரிடம் ராமேஸ்வரம் நகர் போலீசார் ஒப்படைத்தனர். சண்டை சேவல் வியாபாரி சரவணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image