உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வ இளைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கோட்டாட்சியர்.

தமிழகம் முழுவதும் குரானா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் தடுப்பு பணிகளாக சுகாதாரத் துறை காவல் துறை மற்றும் தன்னார்வ இளைஞர்கள் ஈடுபட்டனர் .இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தடுப்பு பணிகளில் கொரோனா பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவுதல், கபசுரகுடிநீர் முக கவசம் விநியோகித்தல், பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வ தொண்டு இளைஞர்களும் பணிபுரிந்தனர் .

தன்னார்வ இளைஞர் களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி  உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் சிறப்பாக பணிபுரிந்த தன்னார்வ இளைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தன்னார்வ இளைஞர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சான்றிதழ்களை பெற்று சென்றனர் .இதில தன்னார்வ இளைஞர் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் பங்கேற்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் அன்பளிப்பாக அளித்த மா பலா வாழை கன்றுகள் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..