கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து 50சதவிகித பேருந்துக்கள் இயக்கம்.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கித்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் 5ம் கட்ட ஊரடங்கில் கொரோனா அதிகம் பாதிக்காத மாவட்டங்களில் குறிப்பிட்ட பயணிகளுடன் பேருந்து இயக்கத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 50சதவிகித பேருந்துக்கள் இயக்கின.ஆனால் பயணிகளுக்கு கைகழுவ சானிட்டரி முகக்கவசம் உள்பட எதுவும் வழங்கப்படவில்லை.இதுபற்றி நடத்துனரிடம் கேட்ட போது நிர்வாகத்தின் தரப்பில் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயனித்தனர்.முதன்நாள் என்பதாலும் மாவட்டங்களுக்குள் இ.பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டதாலும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..