திருநெல்வேலி மண்டலத்தில் 171 பேருந்துகள் இயக்கம்-சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவுறுத்தல்…

திருநெல்வேலி மண்டலத்தில் 171 பேருந்துகள் இயக்கம்-சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவுறுத்தல்…

திருநெல்வேலி மண்டலத்தில் 171 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள படி திருநெல்வேலி மாவட்டத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 01.06.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கி 6-வது மண்டலத்தின் பகுதிகளிலும் அருகிலுள்ள மற்ற மாவட்டங்களின் எல்லை பகுதி வரையிலும் பேருந்துகள் காலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கம் செய்யப்படும்.

திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(திலி) லிட் திருநெல்வேலி மண்டலம் மூலம் 50 விழுக்காடு பேருந்துகளும், 60 விழுக்காடு பயணிகளுடன் 84 நகர்ப் பேருந்துகள் மற்றும் 87 புறநகர் பேருந்துகள், ஆக மொத்தம் 171 பேருந்துகள் இயக்கம் செய்யப்படும்.

இவ்வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு முககவசம் அணிந்தும், பேருந்தில் பின்படிக்கட்டில் ஏறும்போதும், முன் படிக்கட்டில் இறங்கும் போதும் மற்றும் பேருந்தினுள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..