கடத்தப்பட்ட குழந்தையினை 2½ மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை; கண்ணீர் மல்க நன்றி கூறிய தாய்..!

கடத்தப்பட்ட குழந்தையினை 2½ மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை; கண்ணீர் மல்க நன்றி கூறிய தாய்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 31.05.2020 அன்று காலை சுமார் 09.00 மணியளவில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாக வந்த புகாரினையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விஜயகுமார்¸ உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் வாகன பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கிராம விழிப்புணர்வு குழுக்களின் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கும்¸ இளைஞர்களுக்கும் குழந்தை கடத்தப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி கடத்தப்பட்ட குழந்தை சுமார் 2½ மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்கபட்டு குழந்தையை கடத்திய பெண்மணி கைது செய்யப்பட்டார்.

மேலும் குழந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தையின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர் வி. காளமேகம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image