பெரியகுளம் முக்கிய பகுதிகளில் எரியாத மின் விளக்குகள்;குடி காரர்கள் கும்மாளம்: திருட்டு பயத்தால் பொதுமக்கள் அச்சம்..

பெரியகுளத்தில் முக்கிய பகுதிகளில் தெருமின் விளக்குகள் எரியாததால் திருட்டு நடைபெற வாய்ப்பு; பொதுமக்கள் அச்சம்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மையத்தில் தண்டுபாளம் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள சில முக்கிய வீதிகளில் ஓரிரு தினங்களாகவே தெரு மின் விளக்குகள் எரியாமல் உள்ளது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், கர்ப்பிணி பெண்களும் இரவில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

மேலும் இப்பகுதி இருட்டாக காணப்படுவதால் பணம் மற்றும் நகைப்பறிப்பு , வாகனம் திருட்டு ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளது.

மது பிரியர்களும் இருட்டாக இருக்கும் இவ்விடத்தை பயன்படுத்தி மது அருந்தி விட்டு பாட்டில்களை தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். அதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சில சமூக ஆர்வலர்கள் பெரியகுளம் நகராட்சி அலுவலக்தில் தகவல் அளித்தனர். ஆனால் அங்கு பணிபுரியும் வசந்த் என்பவர் அலட்சியமாக பதிலளித்துள்ளார், அதிகாரிகளும் இதுவரையிலும் கண்டும் காணாமல் உள்ளனர் என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

 A.சாதிக் பாட்சா, நிருபர் தேனி மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image