நிலக்கோட்டையில் தி. மு. க மாநில அமைப்புச் செயலாளர் பாரதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தி. மு. க அமைப்புச் செயலாளர் ஆர் . எஸ். பாரதி தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றும் பட்டியல் இனத்தவரை இழிவாகவும் தவறுதலாக சித்தரித்துப் பேசி வருகிறார். இதை கண்டிக்காமல் தலைமைப் பொறுப்பு மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலினை கண்டித்தும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பச்சைமலையான்கோட்டை ஊராட்சியில் உள்ள செம்பட்டி, எஸ். புதுக்கோட்டை , எஸ் மேட்டுப்பட்டி, செல்லாயி புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்கள் ஒன்றாக திரண்டு உரிய சமூக இடைவெளியோடு மாவட்ட பொறுப்பாளர் குமரேசன் தலைமையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஆர். எஸ். பாரதியை உடனடியாக கைது செய்யக் கோரியும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஐ கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதால் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊரடங்கு நேரத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image