தென்காசி மாவட்டத்தில் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

வீகேபுதூரில் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் வழங்கினார்.தென்காசி மாவட்டம் வீகேபுதூரில்,மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வீரகேரளம்புதூர் ஊராட்சியை சேர்ந்த இந்திரா நகர் காலனி கோவிந்தப்பேரி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சிக் கழகச் செயலாளர் எம். சேசுராஜன் தலைமை வகித்தார்.வீரகேரளம்புதூர் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இந்திராநகர் நிர்வாகி கணபதி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் 50 நபர்களுக்கு அரிசி மற்றும் ஒன்பது வகையான காய்கறிகள் வழங்கினார். வீரகேரளம்புதூர் கழக நிர்வாகிகள். மணி, கண்ணன்,  சுந்தரராஜன், பாண்டி, கார்த்திக், செல்வராஜ், நமசிவாயம், கணேசன், ராமையா, டாண்ஆசீர், கலிங்கப்பட்டி ராஜா, முருகேசன், மரிய லூயிஸ், கோவிந்தப்பேரி ரத்தினம், கொம்பன் தாஸ், கந்தவேல் மகேந்திரன், காளி ,நடராஜன், கல்லுத்துசுரேஷ், விஜய் ஆனந்த் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரகேரளம்புதூர் ஊராட்சி கழகச் செயலாளர் எம்.சேசுராஜன் செய்திருந்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image