நடுவப்பட்டி ஈஞ்சார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் குடி பராமரிப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி  ஈஞ்சார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 60  லட்சத்திற்கு குடி பராமரிப்பு பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மாவட்டம் முழுவதும் 54 கண்மாய்கள் கொடி பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன இதில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

மதுக்கடைகளை அரசு விரும்பி திறக்கவில்லை எந்த பாதிப்பும் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திறந்துள்ளோம். மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார்.

அரசின் அறிவிப்புகள் மக்களை நன்மைக்காக மட்டுமே இருக்கும்..

திமுக தரப்பில் மக்களால் பெறப்பட்ட மனுக்கள் ஒரு லட்சம் கூட கிடையாது..

அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட மனுக்கள்..

திமுக சார்பில் கிராமசபை  மூலம் பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது என்று கூட தெரியாது. எதையும் செய்யாமல் குறை மட்டுமே சொல்ல வருகிறார்கள்..

ஏசி ரூமில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர்கள் அல்ல  அதிமுக..

ஸ்டாலின் அரசியல் நாடகமாடுகிறார் ஏனென்று தெரியவில்லை. இரண்டாயிரம் பேர் மனு கொடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றன இரண்டாயிரம் பேர் செல்போன் திருட பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் திமுக நடத்தும் அத்தனையும் நாடகம்.

அரசின் நடவடிக்கைகளால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 அமைச்சர் நிகழ்ச்சி  கிளம்பும் போது  அமைச்சரிடம் பெண்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்-மேலும் பெண்களிடம் நீங்கள் வேண்டாம் என்கிறீர்கள் , அவர்கள் வேணும் என்கிறார்கள் என்ன தான் பன்னதெரில எனவும் –

பெண்கள் கணவர்கள் குடித்துவிட்டு வந்தால் கட்டையால் அடியுங்கள் என கிண்டலாக  தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image