அரசி குறைவாக வழங்கிய ரேசன் கடை குறித்து புகார் அளித்த பெண்ணோடு ரேஷன் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை பெத்தானியபுரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பெண் ஒருவர் அப்பகுதி ரேஷன் கடையில் அரிசி குறைவாக வழங்கப்படுவதாக தனக்கு வழங்கிய அரிசியுடன் குற்றச்சாட்டை வைத்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அப்பகுதி ரேஷன் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் செல்லூர் ராஜு கடை விற்பனையாளரிடம் விசாரணை நடத்தினார். அப்போது கடையில் சம்பந்தம் இல்லாமல் இருந்த பெரியசாமியை கைது செய்யவும், விற்பனையாளர் தர்மேந்திரனை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டார். இதுகுறித்து புகார் தெரிவித்த கார்த்திகா செல்வி கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் எதுவும் தருவதில்லை என்றும், தரக்கூடிய பொருட்கள் தரம் குறைந்தும் எடை குறைவாகவும் வழங்குவதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தேன் உடனடியாக அமைச்சர் கடைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். ஒருவரை கைது செய்யவும், கடைக்கு தொடர்பில்லாத ஒருவரை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டார், இனி இதுபோன்று நடக்காது நான் பார்த்துக்கொள்கிறேன் புகார் மனு ஒன்றை எழுதிக் கொடுங்கள் என  தெரிவித்தார் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..