தமிழகத்திலேயே முதல்முறையாக பில் உடன் மதுபானம்

மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் உள்ள மதுபான கடையில் கடை என் 5245  மதுபான கடை இயங்கி வருகிறது .இந்த மதுபான கடையில் மது வாங்க வரும் குடிமகன்களுக்கு  பணியாற்றி வரும் சூப்பர்வைசராக ஆனந்தகுமார்  கட்டாயமாக பில் வழங்குகிறார். மேலும் அதிகபட்ச விலையில் (MRP)இருந்து ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்குவதில்லை என தகவல் தெரிவித்தார். மேலும் அங்கே மது வாங்க வரும் குடிமக்களிடம் விசாரித்த பொழுது எந்தவிதமான மது வாங்கினாலும் வாங்கியதற்கான பில் உடனடியாக கையில் தருவதாகவும் அதிகபட்ச விலையில் இருந்து ஒரு ரூபாய் கூட கூடுதலாக எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதேபோன்று தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளிலும் கட்டாயம் பில் வழங்கி மது பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள  விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image