கிடாரங்கொண்டானில் கூடுதல் புதிய துணை மின் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரம்கொண்டானில் ரூ. 4.கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் புதிய துணை மின்நிலையம் எம் எல் ஏ எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார்.கிடாரங்கொண்டான் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் 30 கிராமங்களின் மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையத்தை பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் ரிப்பன் கத்தரித்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசினார்.

கிடாரம்கொண்டான் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் , முன்னதாக 16 kv வினியோகம் செய்யப்பட்ட மின்சாரமானது 20 kv மின்சாரம் உற்பத்தி செய்து 30 கிராமங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். செம்பனார்கோயில் பரசலூர், கீழையூர், ஆறுபாதி, மேலப்பாதி, ஆக்கூர், மடப்புரம், மேலையூர், பூம்புகார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தடையின்றி மின்சாரம் பெறும், 21,000 வீடுகள், 2,100 பம்பு செட்டுகள், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் கூறினார்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image