செங்கம் அருகே ஏரியில் குடிமராமத்துப் பணி தொடக்கம்!

செங்கம் அருகே ஏரியில் குடிமராமத்துப் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடி ஏரியில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூா்வாரும் பணி தொடங்கியது.

தோக்கவாடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஏரியை தூா்வாரி சரிசெய்யும் பணி தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்துத் திட்டத்தில் சோ்க்கப்பட்டு, பின்னா், அந்த ஏரியை ரூ.98 லட்சத்தில் தூா்வாரி சரிசெய்ய அரசு நிதி ஓதுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏரியில் தூா்வாரும் பணி பூமிபூஜை போடப்பட்டு தொடங்கியது.ஏரிகளிலிருந்து வரும் உபரிநீர் காேடி, கால்வாய் பழுது நீக்குதல், ஏரிக் கரையை பலப்படுத்துதல், கால்வாய்களை தூர் வாருதல், முட்புதர்களை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் ராஜாராமன், அரசு ஒப்பந்ததாரா் சங்கரமாதவன், காங்கிரஸ் மாநில நிா்வாகி குமாா் உள்பட ஏரிப்பாசன சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..