சுரண்டையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்..

சுரண்டையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்..

சுரண்டையில் அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.முக கவசம் அணியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள்,  கிராம உதவியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஆஙியோர் உள்ளடங்கிய நிலையில் குழு அமைத்து ஜவுளிக்கடைகள், நகைகடைகள்,
மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார ஸ்தலங்களிலும் கொரோனாவை தடுக்க அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளான முக கவசம், அணியாதவர்கள், சமூக விலகல் கடைபிடிக்காதவர்கள்,  கிருமி நாசினி மருந்து கொண்டு கை கழுவும் வசதி  செய்யாதவர்கள் உள்ளிட்ட நோய்த் தொற்று தடுப்புமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிரடி ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது முக கவசம் அணியாமலும், சமூக விலகல் பின்பற்றப்படாமலும் இருந்தது கண்டறியப்பட்டு  அவர்களுக்கு ரூ 4300/- அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal