மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காலால் இயக்கும் கை சுத்திகரிப்பான் இயந்திரம் பொறுத்தப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் காலால் இயக்கும் கை சுத்திகரிப்பான் இயந்திரம் பொறுத்தப்பட்டது.

கொரானா ஊரடங்கில் ஆளும்கட்சியும், ஆண்ட கட்சியும் அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்தி வர மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்  கமல்ஹாசன் வழிகாட்டுதலில் கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று மக்களின் தேவையறிந்து செயல்பட்டு வருகின்றனர்.

இரண்டு மாத ஊரடங்கு கடந்து போன நிலையில் கொரானாவிற்கு நிரந்தரமாக முடிவு கட்டப்படாததால் மத்திய, மாநில அரசுகள் கொரானாவோடு வாழப் பழக சொல்லி கைவிரித்து விட்டன. அதே நேரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் மக்கள் நலன் சார்ந்த ஒவ்வொரு விசயங்களிலும் முன்னோடியாக இருந்து மக்கள் நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைவரின் அறிவுறுத்தல்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் நேற்று (30.05.2020) வில்லிவாக்கம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினியுடன் கூடிய காலால் இயக்கப்படும் கை சுத்திகரிப்பான் இயந்திரம் இலவசமாக பொறுத்தப்பட்டது. இது தமிழகத்திலேயே முதல் நிகழ்வாகும்.

மேலும் அதற்கான முன்னெடுப்பை மாவட்டச் செயலாளர்  பிரியதர்சினி, உதயபானு  தலைமையில் நகரச் செயலாளர்கள்  கிஷோர் வின்சென்ட்,  ஜிம்.கே.மாடசாமி,  திவாகரன்,  தமிழ்ச்செல்வி, வட்டச் செயலாளர்கள்  விஸ்வநாதன் மற்றும் ஹரிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal