பேஸ்புக் நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய மதுரை மாணவர் கிஷோர்- காவல் ஆணையர் பாராட்டு..

பேஸ்புக் நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய மதுரை மாணவன் கிஷோருக்கு காவல் ஆணையர் பாராட்டு..

பேஸ்புக் பக்கத்தில் தனியார் மீடியா நிறுவனங்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வீடியோக்கள் ,செய்திகள், ஆடியோக்களை பதிவேற்றம் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கிவருகிறது.

இந்நிலையில் இந்த தொகுப்புகளை பாதுகாப்பதற்காக பேஸ்புக் நிறுவனமானது ரைட்ஸ் மேனேஜர் (Rights Manager) என்ற ஒரு வசதியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இதில் உள்ள சில வசதிகள் மூலமாக தனியார் நிறுவனத்தின் தரவுகளை எளிதாக பார்த்து பயன்படுத்தி அதனை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்ற ஆலோசனையை மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற கல்லூரி மாணவர் கொரோனா ஊரடங்கு காலத்தின் போது கண்டறிந்து அதனை பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவரின் ஆலோசனையை கேட்டுக்கொண்டு ஒப்பதல் அளித்த பேஸ்புக் நிறுவனம் மாணவரின் ஆலோசனையை அவர் கூறிய ஆப்ஷனை ரத்து செய்தது.

இதனை தொடர்ந்து தங்களது நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கிய கல்லூரி மாணவருக்கு பேஸ்புக் நிறுவனம் ஆயிரம் டாலர் பரிசுத்தொகையை அனுப்பிவைத்தது.

தொடர்ந்து தங்களது நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தை திறமையாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பயன்படுத்தகூடிய பயனாளர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி தனது தொழில்நுட்ப அறிவை வளர்த்ததோடு அதற்கான வருவாயையும் பெற்றுள்ள கல்லூரி மாணவனின் செயலை மதுரை மாநகர காவல் ஆணையர் .S.டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டியுளார்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal