நாளை (1/06/2020) முதல்50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம்: மதுரை கோட்டத்தில் இயக்குவதற்காக 450 பேருந்துகள் தயார்; சமூக இடைவெளிக்கான பணிகள் குறித்து மதுரை மண்டல மேலாளர் ஆய்வு..

தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல்50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம் மதுரை கோட்டத்தில் நாளை இயக்குவதற்காக 450 பேருந்துகள் தயார். சமூக இடைவெளிக்கான பணிகள் குறித்து மதுரை மண்டல மேலாளர் ஆய்வு..

தமிழகம் முழுவதும் நான்கு மாவட்டங்களை தவிர நாளை முதல் பேருந்துகள் இயக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை கோட்டத்திற்க்கு உட்பட்ட சுமார் 450 நகர பேருந்துகளை இயக்குவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளது.

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் விருதுநகர் சாத்தூர் அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் நகர பகுதிகளில் இயக்கும் பேருந்துகளை ஒரு பேருந்தில் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும் உரிய சமூக இடைவெளி பின்பற்றி இறங்க வேண்டும் என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது, பேருந்துகளை சுழற்சி முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் கூடுதலாக பேருந்துகள் இயக்க முடிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை மதுரை மண்டல மேலாளர் ராஜேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மண்டல மேலாளர்: மேலும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வெப்ப பரிசோதனை செய்யப்படும் எனவும் இந்த பரிசோதனையில் அதிகம் இருந்தால் பேருந்தில் ஏற அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அரசு போக்குவரத்து நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டன அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..