சம்பளம் குறைவாக வழங்கப்பட்டததாக கூறி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்!

 சம்பளம் குறைவாக வழங்கப்பட்டததாக கூறி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மே மாத சம்பளத்தை குறைவாக தொழிலாளர்களுக்கு வழங்கியதைக் கண்டித்து போக்குவரத்து பணி மணை முன்பாக ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக முழுச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மே மாத சம்பளம் மட்டும் ஏழு முதல் ஒன்பதாயிரம் மொத்த சம்பளத்தில் குறைத்து வழங்கப்பட்டதாக  கூறி தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமணை முன்பாக எல்.பி.எப்., சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பாகவும், மதுரை எல்லீஸ் நகர் கிளை முன்பாகவும் திரளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal