நிலக்கோட்டை அருகே தொட்டம் பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தடை நீக்கம்!

நிலக்கோட்டை அருகே தொட்டம் பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தடை நீக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தொட்டம்பட்டி கிராமத்தில் ஒருவருக்கு கொரானா நோய் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து மக்கள் வெளியேறுவதற்கும் உள்ளே செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்து வீடு திரும்பியதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், நிலக்கோட்டை வட்டாட்சியரின் அறிவுறுத்தலின் பேரிலும், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டது.இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் கிராம மக்களின் தேவைகளை அறிந்து ஒத்துழைப்பு கொடுத்த வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத் துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் நிலக்கோட்டை வட்டாட்சியர் யூஜின், நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் சங்கரேஷ்வரன், உதவி ஆய்வாளர் கண்ணா காந்தி,கிராம நிர்வாக அலுவலர் ராம மூர்த்தி மற்றும் ஊரக வளர்ச்சி & சுகாதாரத் துறையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal