பாலக்கோட்டில் 500 குடும்பங்களுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிவாரண  பொருட்களை வழங்கினார்.

பாலக்கோட்டில் 500குடும்பங்களுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிவாரண  பொருட்களை வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்களுடைய  வாழ்வாதாரத்தை இழந்த கூலி தொழிலாளர்,  லாரி ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவர தொழிலாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள்,சிறு வியாபாரிகள் மற்றும் அருந்ததியர்கள் என  500 பேருக்கு அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர் இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அரங்கநாதன், பாலக்கோடு ஒன்றிய சேர்மன் கோபால்,   வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் .பேரூராட்சி செயலாளர் அலுவலர் டார்த்தி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image