நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு:-UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது..!

நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு:-UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது..!

ஜூன் எட்டாம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ஷாப்பிங் மால்கள் உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு.

 • தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
 • வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி.
 • அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்கலாம் – ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கலாம்.
 • முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
 • பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.
 • கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.
 • அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.*
 • திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.
 • பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.
 • சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.
 • இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.
 • தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.
 • மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.
 • சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image