கீழக்கரையில் கபசுர குடிநீர் நகராட்சி சார்பாக வழங்கல்..தமுமுக பிரமுகர் முன்னிலை..

இன்று (30/05/2020) கீழக்கரை சாலைதெரு மற்றும் வடக்குதெரு பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் அளவில் வீடு வீடாக வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் தமுமுக உடன் இணைந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு பத்து நாட்கள் முகாம்  இன்று தொடங்கியதை. இதன் முதல் கட்டமாக இன்று (30/05/2020) வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக (தமுமுக) மாவட்ட துணைத்தலைவர் எஸ். முகம்மது சிராஜூதீன் தலைமையில் இன்றைய முகாம் வக்கிவைக்கப்பட்டது. திருப்புல்லாணி வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் ராசிக்தீன்,  கீழக்கரை சித்தா டாக்டர் முத்துராமன் குழுவினர் மற்றும் பல்நோக்கு பெண்பணியாளர்கள் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.

இந்த சமூகபணியில் தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றகழக கீழக்கரை நகர் மாணவர்அணியைச்சேர்ந்த உமர். ரஹிம், அஜீம், பக்கீர் மற்றும் நகர் நிர்வாகி லெப்பைத்தம்பி சாலைத்தெரு முக்கிய பிரமுகர் சீனி முகம்மது மற்றும் பலரும் சிறப்பாக சேவைப்பணியாற்றினர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image