மக்களின் மனுக்களை கொண்டு வந்து அரசிடம் சேர்க்கும் கொரியர் சேவை எதற்கு?..வருவாய்துறை அமைச்சர் திமுகவுக்கு கேள்வி..

தமிழக அரசு தமிழக மக்கள் அனைவரின் தேவையை பூர்த்தி செய்து வரும் நிலையில் மக்களின் மனுக்களை கொண்டு வந்து அரசிடம் சேர்க்கும் ஸ்டாலினின் கொரியர் சேவை எதற்கு, அது விளம்பர நாடகம் தான் அதை மக்கள் விரும்பவில்லை எனவும்,  ஊரடங்கில் மக்களுக்கு தேவையான தளர்வுகளை தேவையான நேரத்தில் முதல்வர் அறிவித்து வருகிறார். அதே போல மக்களின் வாழ்வாதாரமும், தொழில் துறையின் வாழ்வாதாரமும் முழுமையாக கிடைக்கும் வகையில் முதல்வர் அறிவிப்பார் எனவும் மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியில் கூறியதாவது:-

2020 ஜனவரியிலிருந்து தமிழகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக வருபவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதித்து வருகிறோம்,

2 லட்சத்து 47 ஆயிரத்து56l வெளி மாநிலத்தில் பணிபுரிந்த தமிழர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் தவித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் விமானம், கப்பல் மூலமாக தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் விலையின்றி வழங்கப்பட்டுள்ளது,

2 கோடி குடும்ப அட்டைகளின் இலவச உணவு பொருட்கள் மூலமாக தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 8 கோடி மக்களின் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளார் தமிழக முதல்வர்,

2 லட்சம் ஆதரவற்றோர், முதியோர், புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டு இலவச உணவு வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வரும், துணை முதல்வரும், அரசு நிர்வாகமும் மக்களை காப்பாற்றி வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்களின் புகார்களை கொண்டு வரும் கொரியர் சேவையை செய்து வருகிறார்.

ஆனால்,தமிழக அரசு தமிழக மக்கள் அனைவரின் தேவையை பூர்த்தி செய்து வரும் நிலையில் ஸ்டாலினின் கொரியர் சேவை எதற்கு, அது விளம்பர நாடகம் தான் அதை மக்கள் விரும்பவில்லை,

வெட்டுக்கிளிகள் குறித்து விவசாயத் துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே இது குறித்து அச்சப்பட தேவையில்லை,

தேவையான தளர்வுகளை தேவையான நேரத்தில் முதல்வர் அறிவித்து வருகிறார். அதே போல மக்களின் வாழ்வாதாரமும், தொழில் றையின் வாழ்வாதாரமும் முழுமையாக கிடைக்கும் வகையில் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் உதயகுமார் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..