உச்சிப்புளி அருகே வாகன சோதனையில் சிக்கிய வருமான வரி பெயர் பலகை தாங்கிய காரில் வந்த வாலிபர்..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் சார்பு ஆய்வாளர் யாசர் மெளலானா தலைமையில் போலீசார் பெருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று (29.5.2020) மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியை இந்திய அரசு என எழுதப்பட்டு, வருமான வரி பெயர் பலகை தாங்கிய வாகனம்  கடக்க முயன்றது. உஷாரான போலீசார் அந்த வாகனத்தை வழி மறித்து  நிறுத்தினர்.

விசாரணையில், உச்சிப்புளி அருகே துத்திவலசை நாகேந்திரன் மகன் சதீஷ்கண்ணன் 20 எனவும், அவர் ஓட்டி வந்த கார் தொடர்பாக விசாரித்த போது முன்னுக்கு பின் முரண்பட்ட தகவல் தெரிவித்தார். இதில், ஆத்திரமடைந்த சதீஷ் கண்ணன் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார், சதீஷ் கண்ணனை உச்சிப்புளி ஸ்டேஷன் அழைத்து வந்தனர். சார்பு ஆய்வாளர் யாசர் மவுலானா அளித்த புகார் படி  மோசடி சம்பவங்களில் தொடர்புடைய சதீஷ் கண்ணன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் வழக்கு பதிந்து, போலி பெயர் பலகை தாங்கி வலம் வந்த வாகனத்தை பறிமுதல் செய்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..