தொண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் மூன்று பேர் கைது. ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்..

இராமநாதபுரம்  மாவட்டம், தொண்டி அருகே நரிக்குடி விலக்கு  ரோட்டில்  இரு சக்கர வாகனத்தில் வாலிபர் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக  அலைபேசி எண் 94899 19722க்கு வீடியோ ஆதார தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர்  வருண் குமார் அறிவுறுத்தல் படி தொண்டி காவல் சார்பு ஆய்வாளர் சரவணன், திருவாடானை தனிப்பிரிவு சார்பு  ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தலா ஒரு தனிப்படையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்னர். வீடியோவில் தெரிந்த இரு சக்கர வாகனத்தை சினிமா பாணியில் துரத்தி சென்று இருவரையும் பிடித்தனர்.  விசாரணையில் , திருவாடானை அருகே குருந்தங்குடி மணிமுத்து மகன் சூர்யா 23, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கன்னிகுடி சோணை முத்து மகன்
சந்தோஷ்குமார் 22 ஆகியோர் சிறு  பொட்டலங்களாக கஞ்சா விற்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் தெரிவித்த தகவல்படி  இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சீ.கூரணியைச் சேர்ந்த கருணாநிதி மகன் அருண்குமார் (21) என்பவரிடம் மொத்தமாக வாங்கி, சில்லரை விற்பனை செய்ததும் தெரிந்தது. இவர்களிடமிருந்து ஒரு கிலோ 300  கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image