AITUC தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பாக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது!

AITUC தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பாக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது!

AITUC தேனிமாவட்ட ஆட்டோ & அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, இதன் ஒரு பகுதியாக மே 29ஆம் தேதி காலை 10 மணியளவில் தேனிமாவட்டம் முழுவதும் 12 மைய்யங்களில் நடை பெற்றது.

போடிநாகலாபுரம்கிளையில் AITUC மாவட்ட பொதுச்செயலாளர்  N.ரவிமுருகன் தலைமையில் அனுமந்தன்பட்டியில் மாவட்ட தலைவர் வீ.பாண்டி தலைமையில் போடியில் 4 இடங்களில் நடைப்பெற்றது.

தமிழகஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன,

  • தமிழக முழுவதும் போக்குவரத்து துறை RTO மூலம் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு ரூ.7500 நிவாரணம் வழங்கிடு.
  • நலவாரியத்தில் பதிவுசெய்த பதிவுசெய்யாத ஆட்டோ ஒட்டுநருக்கு நிவாரணம் வழங்கிடு.
  • 2020 மார்ச் 1 முதல் புதிப்பிக்கபடவேண்டிய FC ஆட்டோ ஆகியவற்றிற்க்கு 2021 பிப்ரவரி ஒர் ஆண்டு நீட்டிப்பு செய்து கொடு.
  • ஆட்டோ பெர்மிட் மற்றும் சாலைவரி ஒர் ஆண்டுகாலம் அவகாசம் வழங்கி ஆணையிடு.
  • ஒட்டுநர் உரிமம் கட்டணம் இன்றி உரிமத்தை புதிப்பித்துக்கொடு.
  • காவல்துறை மற்றும் RTO சிறைபிடித்த வாகனத்திற்கு அவதாரம் வசூலிப்பதை கைவிடு.
  • ஊரடங்கு காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட ஆட்டோக்களை எந்தவித நிபந்தனையிண்றி விடுவிக்க வேண்டும்.
  • வங்கிகளிளும் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் வாங்கிய வாகன கடன்களை வட்டியும்,அசலையும் கொரணா காலத்திற்கு உட்பட்ட தவணைகளை ரத்துசெய்.

என பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

 A.சாதிக்பாட்சா,நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..