வத்திராயிருப்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க கோரியும், வழக்குகளை திரும்ப பெற கோரியும் ஆர்ப்பாட்டம்…

வத்திராயிருப்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 7500 வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களுடன் ஆர்ப்பாட்டம். ஆட்டோ ஓட்டுனர்களிடம் காவல்துறையினர் பெயர் கேட்டதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 60 நாட்களுக்கு மேலான சூழ்நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோன் நிவாரணம் மாதம் 7,500 வழங்க வேண்டும் ,ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், மாதத் தவணைக் கட்டுவதில் இருந்து 6 மாத கால நீட்டிப்பு செய்ய வேண்டும், ஆட்டோ ஒட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம் முடிந்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் பெயர் கேட்ட நிலையில் இரு தரப்பினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..