Home செய்திகள் கொரோனா நடவடிக்கையால் முடக்கம்: அச்சு ஊடகங்களையும் அவை சார்ந்த தொழிலாளர்களையும் காக்க அரசு முன்வர வேண்டும்:-எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

கொரோனா நடவடிக்கையால் முடக்கம்: அச்சு ஊடகங்களையும் அவை சார்ந்த தொழிலாளர்களையும் காக்க அரசு முன்வர வேண்டும்:-எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

by Askar

கொரோனா நடவடிக்கையால் முடக்கம்: அச்சு ஊடகங்களையும் அவை சார்ந்த தொழிலாளர்களையும் காக்க அரசு முன்வர வேண்டும்:-எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக பல்வேறு அச்சு ஊடகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருசில தினசரி செய்தி தாள்கள் பக்கங்களை குறைத்தும், அச்சிடும் எண்ணிக்கை அளவை குறைத்தும் குறைந்த தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. சில முன்னணி வார இதழ்களும் அதேபோன்றே செயல்பட்டு வருவதுடன் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. இன்னும் சிறிய அச்சு ஊடகங்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள் பணிக்கு வர இயலாமை, அச்சகங்கள் மூடல், விளம்பரங்கள் இன்மை போன்ற காரணங்களால் தங்களின் பிரசுரிப்பை கூட நிறுத்தி வைத்துள்ளன அல்லது குறைத்துள்ளன. இதனால் ஒட்டுமொத்தமாக அச்சு ஊடகங்கள் மற்றும் அதனை சார்ந்த சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, அச்சு ஊடகங்களையும், அதனை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் மத்திய, மாநில அரசுகள் காக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அச்சு ஊடகங்களையும், தொழிலாளர்களையும் காக்கும் பொருட்டு அச்சு செய்தித்தாள்கள் மற்றும் மூலப்பொருட்கள் மீதான சுங்கவரியை ரத்து செய்தும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அச்சு ஊடகங்களுக்கும் அரசு விளம்பரங்களை அளித்தும், அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியும், விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கியும், அச்சு ஊடகங்களுக்கான அனைத்து விதமான வரி விதிப்புகளை ரத்து செய்தும் பேருதவி செய்திட அரசு முன்வர வேண்டும் எனவும், அச்சு ஊடக தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம் ஒருங்கிணைப்பாளர் SDPI கட்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!