ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய நகர் காவல் நிலையம் கட்டிடம் தமிழக அரசின் சார்பில் 1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜை..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய நகர் காவல் நிலையம் கட்டிடம் தமிழக அரசின் சார்பில் 1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். தொகுதியின் சார்பில் தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் காவல் நிலையம் போதிய இடவசதிகள் இன்றி சிறிய கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.நகர் காவல்துறையினர் தங்களுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தங்கள் தொகுதிக்கு புதிய காவல் நிலைய கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கையை உடனடியாக ஏற்று 110 விதியின் கீழ் 1 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட்டார்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்குள் உள்ள பெரிய வளாகத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட 3 அடுக்கு புதிய காவல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்க்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.10 மாத காலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நகர் காவல்துறையினருக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தொகுதியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..