அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி IPS உடன் வெல்ஃபேர் கட்சியின் மாநில நிர்வாகிகள் சந்திப்பு…

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் தனிமையில் இருந்து மீண்டு நேற்று பணியில் இணைந்த அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி IPSஐ சந்தித்து நலம் விசாரித்து உரையாடினர்.

நோய்த் தொற்றால் ஏற்படும் தனிமை எவ்வளவு அபாயகரமானது என்பதை உரையாடலின் போது குறிப்பிட்டது, அந்த தனிமையின் வேதனையை வெளிப்படுத்தியது.

அச்சந்திப்பின் நினைவாக வெல்ஃபேர் கட்சியின் மாநில பொருளாளர் அலி அஸ்கர் துணை ஆணையருக்கு  சீல்டு மாஸ்க் அணிவித்ததுடன் அவருடன் பணிபுரியும் சக காவலர்களுக்கும், வெல்ஃபேர்கட்சியின் சார்பாக “சீல்டு மாஸ்க்” வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் வழக்கறிஞர் ஷாஜஹான் மற்றும்  மாநிலச் செயலாளர் முஹம்மது கவுஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image