விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..! திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் 144 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செங்கம் ராஜா தலைமையிலும் பள்ளிப்பட்டு நாகராஜ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்,
  • மின்சாரத் திருத்தச் சட்டம் 2020ஐ திரும்பப்பெறு!
  • விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்!
  • வரும் குறுவை பருவ கால விதைப்பிற்கு, புதிய கே.சி.சி கடன்களை வழங்கு!
  • விமானத்திற்கான எரிபொருளின் விலையை லிட்டருக்கு ரூ.22.54 ஆக குறைத்திருப்பதுபோல, விவசாயிகள் பயன்படுத்தும் டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.22 ஆக குறைத்திடு!
  • விவசாயிகளை நட்டத்திலிருந்து காக்க, விளைபொருட்களின் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்து!
  • 100 நாட்கள் வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். விவசாயப் பணிகளுக்கு 100 நாட்கள் விவசாய தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • நிலுவையிலுள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கு.!
உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..