மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் செயற்குழு ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சிறப்பு செயற்குழு ஆலோசனை கூட்டம் என்.அப்துல் ஹனான், எஸ்.பாலன் தலைமையில் இன்று (27.5.2020) நடத்தது. பி.பாலசுப்ரமணியன், எம்.செய்யது சுல்தான், சி.செல்வகுமார், எஸ்.நாகராஜன், எம்.சதக்கத்துல்லாஹ், எம்.காதர் முகைதீன், எஸ்.என்.தொத்திரியாஸ் முன்னிலை வகித்தனர். பேரிடர் கால நிவாரணமாக மீனவர் நல உறுப்பினர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கிய தமிழக அரசுக்கும், மீனவர் நலனுக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதி அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லலாம் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரானா பரவல் எதிரொலியால் தங்கள் சொந்த ஊர் சென்ற மீன்பிடி தொழிலாளர்கள் போக்குவரத்து தடையால் ஜூன் 1ல் தொழிலுக்கு திரும்புவதில் சிரமம் உள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பொருளாதாரம் பாதிப்பால் தளவாட சாமான்கள் கிடைக்கப்பெறாததால் படகுகள் சீரமைப்பு பணி நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் . ஜூன் ஒன்றாம் தேதிக்கு பதிலாக ஜூன் 15 அன்று படகுகளை தொழிலுக்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது. தடைக்காலம் நீங்கிய பின் கடலுக்குச் சென்று மீனவர்கள் பிடித்து வரும் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட ஏற்றுமதி மீன் ரகங்களை கொள்முதல் செய்ய ஏற்றுமதி நிறுவனங்கள் முனைப்பு காட்டவில்லை. மீன் ரகங்கள் கொள்முதல் தொடர்பாக தமிழக மீன்வளத் துறை அமைச்சர், மீன்வளத்துறை உயரதிகாரிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜாகீர் உசேன், விஜயரூபன், சர்புதீன், அருளானந்து, மகேஷ், வின்சென்ட், பாக்கிய நாதன், இளங்கோவன், நாராயணன், இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..