மார்ச் முதல் மே 31 வரை கடன் தவனை நீட்டிப்பு காலத்திற்கு வட்டி சலுகை பொருந்தும், வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடியை சந்தித்த பின்;பி.ஆர்.பாண்டியன் அறிக்கை..

மார்ச் முதல் மே 31 வரை கடன் தவனை நீட்டிப்பு காலத்திற்கு வட்டி சலுகை பொருந்தும், வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடியை சந்தித்த பின்;பி.ஆர்.பாண்டியன் அறிக்கை..

மத்திய அரசு நபார்டு வங்கி மூலம் கூடுதலாக ரூ30000ம் கோடி அவசரக்காலகடன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் இயற்க்கை சீற்றங்களால் ஒட்டு மொத்த தமிழகம் தொடர்ந்து பேரழிவை சந்தித்து வருகிறது. இதனால் பெற்றக் கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் நெருக்கடி தாங்காமல் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்க்கொலை அதிர்ச்சி மரணங்கள் அடைந்துள்ளனர்.

தற்ப்போது கொரோனா தாக்குதலால் விவசாய உற்ப்பத்தி பொருட்கள் அழிவால் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். இதனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் 80% விவசாயிகள் கடன் பெறும் தகுதியை இழந்துள்ளனர். எனவே வேளாண் கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாய உற்பத்தியை பெருக்க முடியாது.

இதுவரையில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 வரை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இரண்டு முறை கடன் தவணை திரும்ப செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்தும், வட்டி தள்ளுபடியும் அறிவித்துள்ளார். மார்ச் மாதம் முதல் மே 31 வரை காலத்திற்கான தவணை செலுத்துவதற்க்கான அரசாணை வங்கிகளுக்கு பிறப்பித்துள்ளதாகவும், ஆனால் வட்டி சலுகைப் பெறுவதற்க்கான அரசாணை வழங்கவில்லையெனக் கூறி கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் பெற்ற தேதியில் இருந்து இன்று வரை 9%ம் முதல் 13%ம் வரை வட்டி அபராத வட்டி செலுத்து வேண்டுமென வங்கிகள் கெடுபிடி வசூலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2 வது கட்ட அறிவிப்பில் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்’

தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளும் மத்திய அரசின் 2வது கட்ட அறிவிப்பினை பின்பற்ற மறுப்பதோடு வட்டியில்லா கடனுக்கு அபராத வட்டி வசூல் செய்யப்படும் எனவும் மிரட்டி வருகின்றனர். வங்கிகளின் கடன் வசூல் குறித்து விரிவான திட்டமிடும் வகையில் மாநில, மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தை உடன் நடத்தி திட்டமிட தமிழக அரசு முன் வரவேண்டும் என தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களை இன்று தஞ்சாவூரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

அதற்கு அவர் மார்ச் முதல் மே 31 வரை கடன் தவணை நீட்டிப்புக் காலத்திற்கான வட்டி சலுகை பெறுவதற்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது எனவும் அற்க்கான அரசாணை நகல்களையும் வழங்கினார்.

மேலும் ஜூன் 1 முதல் ஆகஸ்டு வரையிலான கால நீட்டிப்பிற்கும், வட்டி தள்ளுபடி குறித்தான அரசாணைகளும் விரைவில் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது குறித்து தொடர் நடவடிக்கை மேற்க்கொள்ளும் வகையில் மாநில, மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேற்க்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் த.புண்ணியமூர்த்தி உடனிருந்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..