நிலக்கோட்டை அருகே விவசாயி அடித்துக் கொலை: ஒருவர் கைது;  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு!

நிலக்கோட்டை அருகே விவசாயி அடித்துக் கொலை: ஒருவர் கைது;  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு!

 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்த ராமன் வயது 65. இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த செல்லம் மகன்கள் மூர்த்தி வயது 42, தங்கராசு வயது 40 , பொன்னுச்சாமி வயது 38 ஆகிய மூவர் தோட்டமும் பக்கத்திற்கு பக்கம் உள்ளது. இதன்காரணமாக இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் ராமன் நிலக்கோட்டைக்கு வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் நிலக்கோட்டையில் இருந்து செங்கோட்டை நோக்கி திண்டுக்கல் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே வந்து கொண்டிருந்த போது தங்கராஜ் திடீரென வழிமறித்து தகராறு செய்து ராமன் மீது கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இருட்டு நேரம் என்பதால் யாரும் அப்பகுதியில் பார்க்காத நிலையில் அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

பின்னர் அவ்வழியாக வந்த செங்கோட்டையை சேர்ந்த சிலர் ராமன் காயத்தோடு கிடக்கிறார் என தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாருக்கு கிடைத்த உடன் அவரது தலைமையில்  போலீசார் விரைந்து சென்று ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் விரைந்து வந்து சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்து இது குறித்து விசாரணை நடத்தினார்.

பின்னர் கொலை செய்த தங்கராஜை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..