மதுரையில் மீண்டும் தொடருமா சாலை பணிகள்??.. ஊரடங்கும்.. தடையும் நீங்கி நாட்கள் பல கடந்து விட்டது…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால்  மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வந்த சாலை போடும் பணிகள் நிறுத்தப்பட்டது.

ஆனால் சில நாட்களுக்கு முட்பு ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு கட்டுபாட்டுடன் பணிகள் தொடரலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.  ஆனால் மாநில அரசும் மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்து  நாட்களுக்கு மேலாகியும் சாலை பணிகள்  தொடங்கப்படவில்லை.

சாலை பணி பாதியில் நிறுத்தப்படரடதால் பல இடங்களில் மேடு பள்ளத்துடன், இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக போட்டுள்ள தார் சாலையில் கற்கள் பெயர்ந்து வருகிறது.  மதுரை மாநகராட்சி நிர்வாகம் தரமான சாலையை அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image