அவனியாபுரம் கொலை வழக்கில் 3பேர் கைது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளைக்கல் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் 3 நபர்கள் கைது . மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராணி இவரதுவரது மூத்த மகன் விக்னேஷ் என்ற சுப்பிரமணியன் (வயது 36) .

இவரது தந்தை ஆனந்தமூர்த்தி கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்து உள்ளார்.மேலும் இவரது தம்பி இருளப்பன் இரண்டு வருடத்திற்கு முன்பு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்நிலையில் விக்னேஷ் என்ற சுப்பிரமணியன் தாயார் ராணியுடன் காமராஜ நகர் பகுதியில் இருக்கும் தனியார் பர்னிச்சர் கடையில் மூன்று வருடங்களாக வேலை செய்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் வேலை பார்த்து வந்த விக்னேஷ் என்ற சுப்பிரமணியன் 2018 ஆம் ஆண்டு மதுரையில் சரண் என்பவருடன் சேர்ந்து மாரி என்பவரை வெட்டி உள்ளார். வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார்.

பின்பு மும்பைக்கு சென்று வேலை செய்து மீண்டும் மதுரை வந்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை இரவு சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்த பொழுது முதுகில் கத்தியால் ஏற்பட்ட கீறல் காயம் இருந்தது அவனிடம் தாய் ராணி கேட்டதற்கு மாரிக்கு ஆதரவாக மணி, சோனா, சோம்பன் அனைவரும் சேர்ந்து ராஜீவ் காந்தி நகர் பால்வாடி அருகில் வழிமறித்து கத்தியால் முதுகில் கோடு போட்டு விட்டான் என்று ராணியிடம் சொல்லியுள்ளார்.

திருப்பரங்குன்றம் – வெள்ளக்கல் செல்லும் ரோட்டில் விக்னேஷ் என்ற சுப்பிரமணி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவனியாபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக அவனியாபுரம் காவல் துறை ஆய்வாளர் பெத்துராஜ், உதவி ஆணையர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.

வதனிப்படையினர் மாரி, தங்கபாண்டி மற்றும் டோக் ரவி ஆகியோரை அவனியாபுரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..