சிஐடியு தொழிர்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்; மற்றும் கோரிக்கை மனு..!

சிஐடியு தொழிர்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்; மற்றும் கோரிக்கை மனு..!

திண்டுக்கல் ஊராட்சி ஓஎச்டி ஊழியர்கள், தூய்மை காவலர்களுக்கு முதல்வர் அறிவிப்பின்படி அரசாணை வெளியிடக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

ஊராட்சிகளில் உள்ள ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.2600/அடிப்படை ஊதியம் ரூ.4000/ ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி அரசாணை வெளியிடவும், தூய்மை காவலர்களுக்கு ரூ.2600/ ஊதியம் ரூ.3600/ ஆக உயர்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை அரசாணையாக வெளியிட வலியுறுத்தியும், ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கவும், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் , சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமையில் 60 தொழிலாளர்களும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் குணசீலன் தலைமையில் 75 பேரும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் தனசாமி தலைமையில் 70 பேரும், நத்தத்தில் சிஐடியு கன்வீனர் ஸ்டாலின் தலைமையில் 40 பேரும், வத்தலக்குண்டில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் 150 பேரும், நிலக்கோட்டையில் சிஐடியு உதவித்தலைவர் அழகர்சாமி தலைமையில் 70 பேரும், குஜிலியம்பாறையில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 பேரும், சாணார்பட்டியில் ராஜா தலைமையில் 60 பேரும், தொப்பம்பட்டியில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் மோகனா தலைமையில் 50 பேரும் மனு கொடுக்கும் இயக்கத்தில் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..